deepamnews
இலங்கை

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

“அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு இது பொருந்தாது” என, இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீன உறுப்பினர்களாக செயற்படும் சந்திம வீரக்கொடி, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜோன் செனவிரத்ன, நிமல் லன்சா ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடைபெற்றபோது சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

Related posts

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்  – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam

சாவல்கட்டில் கத்தி வெட்டு தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில்

videodeepam

அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

videodeepam