deepamnews
இலங்கை

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் நுவரெலியாவில் விபத்து – 7 பேர் பலி, 57 பேர் காயம்

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய –  ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  57 பேர் காயமடைந்துள்ளனர்.

வான் ஒன்றுடன் குறித்த பஸ் மோதியுள்ளதுடன் முச்சக்கரவண்டியொன்றும் விபத்திற்குள்ளானது.

நேற்று இரவு விபத்திற்குள்ளான பஸ் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

வானில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் விபத்தில் பலியாகியுள்ளனர்.  

குறித்த வேன் டிக்கோயாவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

ஹட்டன் – டிக்கோயாவை சேர்ந்தவர்களே வேனில் பயணித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த 7 பேரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மஹேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.

 காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிறந்து 42 நாட்களே ஆன  குழந்தை பலி

videodeepam

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குடும்பத்துடன் அமெரிக்கா பயணம்

videodeepam

இந்தியாவிற்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இலங்கைக்கும் அச்சுறுத்தல் தான் – மிலிந்த மொறகொட

videodeepam