deepamnews
இலங்கை

தேர்தலுக்கான செலவை ஈடு செய்வது சவாலானது – திறைசேரி செயலாளர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

தேர்தலுக்கு அவசியமான நிதியை திரட்டுவது சவாலான விடயம் என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சத்தியக்கடதாசி மூலம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற கேர்ணல் W.M.R.விஜேசுந்தர தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பிலேயே அவர் சத்தியக்கடதாசியை தாக்கல் செய்துள்ளார்.

அந்நியச்செலாவணி, உள்ளக நிதியினை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரச நிதி முகாமைத்துவம் தற்போது சவாலான விடயமாக மாறியுள்ளதாக திறைசேரி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் அரச பணப்புழக்கத்தின் அடிப்படையில் 163 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் அனைத்து செலவுகளுக்காகவும் 18 பில்லியன் ரூபா மாத்திரமே எஞ்சியிருப்பதாக அவர் தனது சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரி செயலாளரின் சத்தியக்கடதாசிக்கமைய, அரசாங்கத்தின் மாதாந்த நிதிப் பற்றாக்குறை 296 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகிறது.

இந்த நிலைமையில், செலவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் போது, சிந்தித்து செயலாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளிடம் சேட்டை – மாணவன் மீது தாக்குதல்

videodeepam

பால்மா விலை மீண்டும் குறைப்பு..!

videodeepam

எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்கவில்லை- ஹரீன் பெர்னாண்டோ கவலை தெரிவிப்பு

videodeepam