deepamnews
இலங்கை

13 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாட சம்பந்தனை சந்தித்தார் ஜனாதிபதி

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடான சந்திப்புகளின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

13 ஆம் அரசிலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் காணி விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது மிக முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் நேற்று முன்தினம் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முட்டைக்கான புதிய விலை வெளியானது!

videodeepam

நைஜீரியாவும் இலங்கையைப் போன்று திவாலாகும் – உலக வங்கி எச்சரிக்கை

videodeepam

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் –  சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு

videodeepam