deepamnews
இலங்கை

அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று  கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அனைத்துக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படட பின்னர் அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்போது, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்கான சிறப்புக் கூட்டம் அடுத்துவரும் நாட்களில்  நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி – விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

videodeepam

இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்

videodeepam

ஜனாதிபதி இழுத்தடிப்பு – அதிருப்தியில் மொட்டு கட்சி?

videodeepam