deepamnews
இலங்கை

இந்தியாவின் இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தியது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணங்களை வழங்குவதில் இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்கால சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் கீழ் இலங்கையில் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு ஏற்ற வகையில் நிதி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் இருந்து போதிய உத்தரவாதங்கள் பெறப்பட்டவுடன், இலங்கைக்கான நிதியுதவி திட்டமொன்றை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இந்தியாவின் இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வலுப்பெறும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

இலங்கையர்கள் 10,000 டொலருக்கான இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் 

videodeepam

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – நிதி அமைச்சருக்கு அனுமதியளிக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்.

videodeepam

யாழில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதி கோர விபத்து. இருவர் உயிரிழப்பு

videodeepam