deepamnews
இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கும் சாத்தியம்

சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக, கடந்த ஜனவரி 4ஆம் திகதி சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது.

தற்போது சந்தையில் 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 4,409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு 5,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் – சாகல ரத்நாயக்க தெரிவிப்பு

videodeepam

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்

videodeepam

 நீர் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம் – நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல்

videodeepam