deepamnews
இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் – இந்திய ஊடகம் தகவல்

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா உதவியை வழங்க முன்வந்தபோதும், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை தரும் வகையில் இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியது.

அதில், இலங்கைக்கு நிதியுதவி மற்றும் கடன் நிவாரணத்துடன் ஆதரவளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு அதன் கடனுக்காக இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கடிதம் ஜனவரி 19ஆம் திகதி இலங்கையின் நிதியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் சீனாவின் இந்த நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலை உடனடியாகப் பெறுவதற்கு இலங்கைக்கு போதுமானதாக இருக்காது என தொடர்புடைய தரப்புக்களை கோடிட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Related posts

159வது வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சில் இடம்பெற்றது .

videodeepam

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு

videodeepam

கொட்டும் மழையின் மத்தியில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

videodeepam