deepamnews
இலங்கை

இலங்கைக்கு கடன் நீடிப்பு -சீனா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது

சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த நிதியுதவி குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக,சீன வெளிவிவகார அமைச்சு கூறியதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்வதால், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளை சீனா செய்து வருகிறது என்றும் சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கியுள்ள நாடு!

videodeepam

முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை

videodeepam

நாட்டில் போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

videodeepam