பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை முடிந்து அவர் மீண்டும் அவற்றில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விரைவில் அவர் இந்தத் தளங்களில் இயங்க அனுமதிகப்படுவார் என்று மெட்டா சர்வதேச விவகாரங்களின் தலைவர் நிக் க்ளெக் தெரிவித்தார்.
இது குறித்து நிக், “2021 அமெரிக்க கலவரத்திற்குப் பின்னர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்படுகிறது. இருப்பினும் சில கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. மீண்டும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் ஒவ்வொரு விதிமீறலுக்கும் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்,