deepamnews
இலங்கை

மற்றுமொரு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்

 தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பதவி விலகுமாறு WhatsApp மற்றும் தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்று முன்தினம் இரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்,

இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.
மொஹமட்டின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவரிடமிருந்தோ, ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ தமக்கு அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் – வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் காட்டம்

videodeepam

மோசமடையும் இலங்கையின் உணவுப் பற்றாக்குறை – எச்சரிக்கும் சர்வதேச அமைப்பு

videodeepam

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

videodeepam