deepamnews
சர்வதேசம்

நியூசிலாந்து – ஒக்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 3 பேர் பலி

நியூசிலாந்து – ஒக்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், ஒக்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தில் சிக்கியுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அவரச கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒக்லெண்ட்டிற்கு நியுஸிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் விஜயம் மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பாக தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்கப்படும் என நியுஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவுக்குத் தடை – இந்தோனேஷிய நாடாளுமன்றில் சட்டமூலம் நிறைவேறியது

videodeepam

சீனாவில் காய்ச்சல் தொற்று அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த திட்டம்

videodeepam

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கரடியின் முக அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

videodeepam