deepamnews
இலங்கை

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் – வீதிகள் பல மூடப்படுகின்றன

75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் காரணமாக நேற்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து திட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, குறித்த காலப் பகுதியில் கொழும்பு, காலி முகத்திடலை மையமாகக் கொண்டு 20 வீதிகள் மூடப்படவுள்ளதுடன், மேலும் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

Related posts

மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – உதவி கோரப்பட்டதாக சன்ன ஜயசுமன தெரிவிப்பு

videodeepam

சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

videodeepam

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் – பந்துல!

videodeepam