2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புத் தொகையை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், மற்ற கடனாளிகளுடன் சேர்ந்து, சீனா நம்பகமான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க ராஜதந்திரி விக்டோரியா நூலன்ட் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடந்த செப்டெம்பர் மாதம் உலகளாவிய கடன் வழங்குனருடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்து கொண்டது.
மூன்றாவது குறிப்பிடத்தக்க கடன் வழங்குநரான இந்தியா, கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அதன் நிதி உத்தரவாதங்களை அனுப்பியது.
எனினும் சீனா இதுவரை வழங்கிய உத்தரவாதம் போதாது என்று நூலன்ட் குறிப்பிட்டார்.
சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி, இலங்கைக்கு அதன் கடனை இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.