deepamnews
இலங்கை

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 400 ரூபா  

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாயிலிருந்து 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை 400 ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐஓசி நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெற்றோல் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அரசின் தீர்மானம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை

videodeepam

சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகருக்கு விளக்கமறியல்

videodeepam

நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam