deepamnews
இலங்கை

வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள 109 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டுள்ள 109 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த காணியை 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இராணுவத்தினர் வசமுள்ள 05 காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியும் இன்று முழுமையாக விடுவிக்கப்படவுள்ளன.

இந்த காணிக்கான உரிமையாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பருத்தித்துறையிலுள்ள 09 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு பலாலி வடக்கு பகுதியிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 13 ஏக்கர் காணி இன்று கையளிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து விடுவிக்கப்படும் காணியிலுள்ள நகர மண்டபத்தை வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியமர்த்தப்படவுள்ள குடும்பங்களுக்கு தேவையான உதவித்தொகையை இன்று உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – நிதி அமைச்சருக்கு அனுமதியளிக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்.

videodeepam

சுண்டிக்குளம் பறவைகள் சாரணாலயத்தின் கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வு.

videodeepam

மனித பாவனைக்கு உதவாத உணவுகள்: உணவகங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

videodeepam