deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது: நிராகரித்தது சர்வதேச நாணய நிதியம்.

பாகிஸ்தான் அரசின் கடன் மேலாண்மை திட்டம் சர்வதேச நாணய நிதியம் அமைப்பால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கை கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. பின்னர் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் கேட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு கடனாக நிதியுதவி வழங்க முன்வந்தது.

சர்வதேச நாணய நிதியத்திடமும் (ஐ.எம்.எப்.) கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை ஐ.எம்.எப்.க்கு அனுப்பியது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் ஐ.எம்.எப். இடையே சுமூக ஒப்பந்தம் எட்டப்படும் என கூறப்படுகிறது. இதற்காக ஐ.எம்.எப். குழு ஒன்று பாகிஸ்தானில் முகாமிட்டு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. எனினும், இந்த சி.டி.எம்.பி. திட்டத்தில் உண்மையில்லை என்றும், அதில் பல்வேறு தவறுகளுக்கான நோக்கங்கள் உள்ளன என்றும் தொழில்நுட்ப ரீதியிலான விவாதத்தின்போது, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பெற கூடிய நிதி உதவி அனைத்தும் பாகிஸ்தானின் ராணுவ உயரதிகாரிகளின் கைக்கே போய் சேருகிறது என ஐ.எம்.எப். குறிப்பிட்டு உள்ளது. தொடர்ந்து அதன் எதிரொலியாக அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

Related posts

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – விமான சேவைகள் இரத்து

videodeepam

தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்ய போர் – நள்ளிரவில் கடும் வான்வழி தாக்குதல்

videodeepam

அமெரிக்காவுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல் – புடின் பகிரங்க எச்சரிக்கை

videodeepam