deepamnews
இலங்கை

காலி முகத்திடல், அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை

அனுமதி பெறாத நபர்கள் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று பிற்பகல் முதல் இன்றைய 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடையும் வரையில் குறித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளமையினால், அவர்களின் பாதுகாப்புக் கருதியும் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாலும் தடை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related posts

ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சை நாளை இடம்பெறாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

videodeepam

வாக்குச்சீட்டு அச்சுப் பணிகளுக்கான நிதி தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்

videodeepam

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

videodeepam