deepamnews
இலங்கை

அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தின் பாரத்தை இலங்கை தொடர்ந்து உணர்கிறது – பொதுநலவாய செயலாளர் தெரிவிப்பு

அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தின் பாரத்தை இலங்கை தொடர்ந்து உணர்கிறது.

இந்தநிலையில் நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை ஒவ்வொரு இலங்கையர்களும் அறிந்துக்கொள்ளவேண்டும் என்று பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இலங்கை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை உணர்கிறது என்பதை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அழுத்தத்தைத் தாங்குவது கடினமாக இருக்கும்.

இந்தநிலையில் நீங்கள் தனியாக அல்ல. நீங்கள் இந்த சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின் சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

பெண்களுக்கான உரிமைகள் எதிர்வரும் தேர்தல்களில் உறுதிப்படுத்த வேண்டும்-

videodeepam

12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிப்பு, படகுகள் அரசுடமை!

videodeepam

ஐ.தே.க- வுடன் ஜனநாயகத்தை பாதுகாக்கவே இணைந்தோம் – பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் கருத்து

videodeepam