deepamnews
இலங்கை

பெப்ரவரி செலவுகளுக்கு மட்டும் 77 கோடி ரூபாவை கோரும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பெப்ரவரி மாதத்திற்கு மாத்திரம் 77 கோடி ரூபாவை வழங்குமாறு  நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நாளை அல்லது நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை என்றும், அது தொடர்பான சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,  தேர்தலுக்கு பணம் வழங்கக்கூடாது என்ற பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு எவ்வித தயார்நிலையும் இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிப்பு – சாகர காரியவசம் தெரிவிப்பு

videodeepam

முதியோர், நோயாளருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை வழங்கப்படும்! – ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

videodeepam

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு – முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு

videodeepam