deepamnews
இலங்கை

செலவுகளுக்கான பணத்தை நிதியமைச்சு சிரமத்துடன் நிர்வகிக்கிறது – ஷெஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டுக்கு தேவையான பணத்தை, நிதி அமைச்சு மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் முகாமைசெய்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பொதுமக்களின் செலவினங்களுக்குத் தேவையான பணத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஏனைய அனைத்து அமைச்சுக்களின் செலவுகளை நிர்வகிப்பதுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் செலவுகளை நிர்வகிப்பது தொடர்பாக சில தரப்பினர் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி – விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

videodeepam

15 வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு

videodeepam

வியட்நாம் முகாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

videodeepam