deepamnews
இலங்கை

துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிப்பு

துருக்கியில் பாரிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 9 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் 8 பேருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்களுடன் தொடர்ந்தும் இலங்கை தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதுடன் நிலஅதிர்வில் சேதமடைந்த கட்டிடத்தில் குறித்த நபர் இருந்திருக்கவில்லை எனவும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த பெண் சேதமடைந்த கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அவர் அங்கு இருந்திருக்கவில்லை தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்க முடியாது – மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

videodeepam

சர்வதேச நாணய கடன் வசதியை பெற்றுக் கொண்ட தற்போதைய அரசுக்கு எனது பாராட்டுக்கள் – மைத்திரிபால சிறிசேன

videodeepam

நாட்டின் பண வீக்கம் கட்டுப்பாட்டில் வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை

videodeepam