deepamnews
சர்வதேசம்

துருக்கி- சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்தது!

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே தெரிவித்தார்.

மேலும், 20,426 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5,700 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிந்துள்ளதாகவும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியாவில், குறைந்தது 1,602 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 3,500பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் மற்றும் ஒயிட் ஹெல்மெட் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பேரழிவிற்குள்ளான பகுதியில் பனிப்பொழிவு ஆகியவை மீட்புப் பணிகளை தாமதப்படுத்தி வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.

Related posts

தேசியப் பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

videodeepam

பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிஷி சுனக்

videodeepam

பொருளாதார நெருக்கடி அதிகரிப்பு – கானா ஜனாதிபதி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

videodeepam