deepamnews
சர்வதேசம்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிப்பு

துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதுவரை 2,300-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 7.5 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, துருக்கியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 2,300 க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1939 ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இது என்று கூறிய ஜனாதிபதி ஏர்டோகன், இதன் விளைவாக 2,818 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறினார்.

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தற்போது, கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களைத் தேடி தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது எகிப்தின் கெய்ரோ, சைப்ரஸ் மற்றும் லெபனான் போன்ற தொலை தூர பகுதிகளில் உணரப்பட்டது.

6.6 மெக்னிடியூட் அளவில் குறைந்தது 20 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ் மற்றும் யுக்ரைன் உட்பட பல நாடுகள் உடனடியாக உதவிகளை வழங்கிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

videodeepam

லிபியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்த 73 பேர் உயிரிழப்பு

videodeepam

பிரான்ஸ் பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, (Annie Ernaux) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

videodeepam