deepamnews
இலங்கை

துருக்கி நிவாரணப் பணிகளுக்காக 300 பேர் அடங்கிய இராணுவக் குழு தயார் நிலையில்

துருக்கியில் இடம்பெறும் நிவாரணப் பணிகளுக்காக அனுப்புவதற்கு 300 பேர் அடங்கிய இராணுவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில், பிரிகேடியர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடங்கியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் குறிப்பிட்டார்.

இராணுவ மருத்துவ படையணி மற்றும் பொறியியலாளர் படையணியினர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பிற்காக இராணுவ கமாண்டோ வீரர்களும் அணியில் உள்ளதாக இராணுவப்பேச்சாளர், பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

Related posts

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

videodeepam

அமெரிக்க இராஜதந்திரி சின்டி ஜனாதிபதியுடன் சந்திப்பு

videodeepam

புகையிரத கழிவறையில் ஒரு குழந்தை கண்டெடுப்பு

videodeepam