deepamnews
இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M. சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்ததாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று குறிப்பிட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகினாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடக்கில் சீரற்ற வானிலையால் 500 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

videodeepam

70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

videodeepam

மலையக பிரச்சினைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலை வேண்டாம் – மனோ கணேசன் எச்சரிக்கை

videodeepam