deepamnews
சர்வதேசம்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி 11 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள் – மீட்புப் பணிகள் தொடரும்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11,000ஐ கடந்துள்ளது. கடந்த பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடூரமான இயற்கை சீற்றம் இதுவென புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திங்கள்கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்ததாக துருக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,236 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8,800 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

அதேவேளை, 2011 ஆம் ஆண்டு ஜப்பான் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20,000 பேர் காவுகொள்ளப்பட்டனர்.

துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய நிலநடுக்கமும் அந்த அளவிற்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு அருகில் உயிருடன் புதையுண்ட கணவன் 48 மணித்தியாலங்களின் பின்னர்  மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் துருக்கி மற்றும் சிரிய மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழுத் தலைவர் விமான விபத்தில் பலி!

videodeepam

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழப்பு.

videodeepam

 ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவிப்பு 

videodeepam