deepamnews
இலங்கை

அத்தியாவசிய செலவினங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அத்தியாவசிய அரச செலவினங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச வருமான நிலைமை மேம்படும் வரை இதனை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தடையாக இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிதி, சிறுநீரக நோயாளிகளுக்கான நிதி, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி என்பவற்றுக்கு மாத்திரமே நிதி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை தவிர, தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவு, மஹபொல உதவித்தொகை, திரிபோஷ வேலைத்திட்டம், விவசாய ஓய்வூதியம், பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்குத் திட்டம், இராணுவம் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினருக்கான கொடுப்பனவு, இராணுவ வீரர்களின் பெற்றோர் பராமரிப்புக் கொடுப்பனவு, ஒத்திவைக்க முடியாத மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய தொலைத்தொடர்பு சேவைகள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், இராணுவத்தினருக்கு உணவு வழங்கல், பராமரிப்பு சேவைகள், கட்டட வாடகை, துப்புரவு சேவைகள், பாதுகாப்பு சேவைகளுக்கான ஒப்பந்த கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதி போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் மற்றும் உர மானியம் வழங்கல் போன்ற நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

75 ஆவது  சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேருக்கு விடுதலை

videodeepam

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

videodeepam

மேலும் 10 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை

videodeepam