deepamnews
சர்வதேசம்

சிரியா நிலநடுக்கத்தால் 90 மணித்தியாலங்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தையும் தாயும் உயிருடன் மீட்பு

சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் பச்சிளம் குழந்தையுடன் சிக்கித் தவித்த தாய் 90 மணித்தியாலங்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவானது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில், துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தறபோது 24,000-ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  

இந்நிலையில், தெற்கு சிரியாவிலுள்ள ஹேட்டே பகுதியில் இடிபாடுகளிலிருந்து பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையையும் தாயையும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

யாகிஸ் உலாஸ் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு, முதலுதவிக்காக கொண்டு சென்றுள்ளனர். குழந்தை கண்களைத் திறந்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மயங்கிய நிலையில் இருந்த தாயையும் மீட்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related posts

22 வருடங்களில் இல்லாத அளவு வட்டி வீதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி.

videodeepam

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயாராகும் பிரித்தானியா!

videodeepam

நைஜீரியாவில் பண மதிப்பிழப்பு – வங்கிகளுக்கு தீ வைத்து மக்கள் போராட்டம்  

videodeepam