deepamnews
இலங்கை

அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்களின் தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

வைத்திய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் அரச வைத்தியசாலைகளில் சுமார் 140 மருந்து வகைகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இவற்றில் 40 வகையான மருந்துகள் இந்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Related posts

படிப்படியாக வலுவிழக்கும் தாழமுக்கம் – நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

videodeepam

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின சுதந்திர தின நிகழ்வுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பு

videodeepam

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – குளிர் குறைவடையும் எனவும் அறிவிப்பு

videodeepam