deepamnews
இலங்கை

மருந்து கொள்வனவு உள்ளிட்ட சில செலவினங்களுக்கு நிதியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தின் சில அத்தியாவசிய செலவினங்களுக்கு நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொள்வனவு, நெல் கொள்வனவு, போசாக்குக் குறைபாட்டை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட செலவினங்களுக்கும் இவ்வாறு நிதி விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, ஜனாதிபதியின் யோசனையின் பிரகாரம், 2022ஆம் ஆண்டு முதல் 18,000 இற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிலுவைகளை வழங்குவதற்கான நிதியை விடுவிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை

videodeepam

அரிசி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

videodeepam

இன்றுமுதல் பால் மாவின் விலை குறைப்பு – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானம்

videodeepam