deepamnews
இலங்கை

தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது. இருப்பினும் முன்னதாக திட்டமிட்டபடி நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போதே அரசியல் கட்சி செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

Related posts

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்  – சந்திரிகா

videodeepam

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின சுதந்திர தின நிகழ்வுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பு

videodeepam