deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை 675,000 இற்கும் அதிகமான தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 19ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, சுமார் 02 இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து – நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல்!

videodeepam

பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

videodeepam

சீரற்ற காலநிலை காரணமாக 18,219 பேர் பாதிப்பு

videodeepam