deepamnews
இலங்கை

முட்டை விலை அதிகரிப்புக்கு தீர்வு – இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை நேற்று  மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இல்லை என பரிந்துரை கிடைத்துள்ளமைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 02 மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேக்கரி தொழில்கள் போன்ற தொழில்களுக்காக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

மீனவர் பிரச்சினை – கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா

videodeepam

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பொதுத்தேர்தல் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு

videodeepam