deepamnews
இந்தியா

காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபா நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட பின்னர் நேற்று காலை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது,  நான்கு மாணவிகள் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாதுகாப்பு நிதி என்பது அரசுத்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் – இந்திய  பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

videodeepam

பருவநிலை மாற்றம் பல்வேறு கோணங்களில் நம்மை தாக்குகிறது : நிர்மலா சீதாராமன்

videodeepam