deepamnews
இலங்கை

தபால் மூல வாக்களிப்பு குறித்த திகதியில் இடம்பெறும் சாத்தியம் – தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை நேற்று  முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், நிதி கிடைக்காமை காரணமாக தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதில் தடைகள் ஏற்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச அச்சகம் என்பன கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – குடும்பஸ்தர் பலி

videodeepam

மதுபானசாலைகளுக்கு பூட்டு – மதுபான விற்பனைக்கு அனுமதி

videodeepam

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம்

videodeepam