deepamnews
இலங்கை

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது அரச அச்சகத்தின் கடமையென  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசின் பங்குதாரராக அரச அச்சகமும் செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே அதற்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடப்பட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய செயற்பாடு என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், இந்த முறை வாக்கு சீட்டு அச்சிடுவதற்காக நிதி கோருகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடாகும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இலங்கையின் கடன் தொடர்பான பத்திரத்திற்கு உத்தரவாதம் வழங்கியது சீனா

videodeepam

புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைப்பு

videodeepam

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் – இந்திய ஊடகம் தகவல்

videodeepam