deepamnews
இந்தியா

ஆறு தமிழக கடற்றொழிலாளர்கள் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள், யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக்கு அப்பால் உள்ள கோடிக்கரை அருகே நடுக்கடலில் வைத்து, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களின் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், உள்ளூர் கடற்றொழில் கிராமங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.

நம்பியார் நகரைச் சேர்ந்த இந்த கடற்றொழிலாளர்கள் கடந்த 14ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்று, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது தமிழக கடற்றொழிலாளர்களிடம் இருந்த ஜி.பி.எஸ், கையடக்க தொலைபேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள், புஷ்பவனம் கடற்கரையில் வைத்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்

videodeepam

தமிழகத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு – பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

videodeepam

ஜூன் மாதத்தில் இந்தியாவையும் பொருளாதார பெருமந்தம் தாக்கும் – முதன்முறையாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு

videodeepam