deepamnews
இலங்கை

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் நெருக்கடி

videodeepam

75 ஆவது  சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேருக்கு விடுதலை

videodeepam

எகிப்துக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

videodeepam