deepamnews
இந்தியா

ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் –  இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு  விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தின் போது,  ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும்  கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்  சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் மனுதாரர் கோரிக்கை வைக்க முடியும் எனவும் நான்கு வாரத்தில் உரிய பதில்  கிடைக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுக முடியும் என்றும்  கடந்த ஜனவரி  மாதம் 18 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில்,  ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக  அறிவிப்பது குறித்து ஆலோசனை இடம்பெற்று வருவதாக இந்திய  மத்திய  அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

எனினும்,  ராமர் பாலம் தொடர்பில்  மத்திய  அரசு எவ்வித  முடிவையும் தெரிவிக்கவில்லை என மீண்டும்  உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு செய்துள்ளார்.  

இதற்கமைய, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரிய  வழக்கை பட்டியலிட்டு  விசாரிக்க வேண்டும்  என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுள்ள  தலைமை  நீதிபதி டி.வை. சந்திரசூட்,  ராமர் பாலம் தொடர்பான மனு  விரைவாக பட்டியலிட்டு  விசாரிக்கப்படும் என தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

சட்டப்பேரவையில் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது – திமுக எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

videodeepam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மைத்ரேயன் – எடப்பாடி அதிரடி நடவடிக்கை

videodeepam

கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை வீடு தேடி போய் சமரசம் செய்ய முடியாது – அண்ணாமலை அறிவிப்பு

videodeepam