விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து படப்பிடிப்பில் ரசிகர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல இடங்களில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியளவில் இப்படி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை பலருக்கும் கொடுத்துள்ளது.
இந்த சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படுமா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.