deepamnews
இலங்கை

அடுத்த வருடத்தில் பொதுத் தேர்தல் – மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி,  தாம்  விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தனது முன்னுரிமை எனவும் அதனைச் செய்வதன் மூலம் மக்கள் மீதான சுமை குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் சட்டம், அமைதி இல்லாமல் அதனை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி, சட்டம் மற்றும் அமைதியை பாதுகாப்பதாகவும் அவை சீர்குலைய இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் ஜனநாயக சமூகத்தினை நாட்டில் உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கு, கிழக்கில் கால்நடைகளின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு – காரணத்தை கண்டறிய மாதிரிகள் பரிசோதனை

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு

videodeepam

தெற்காசியாவிலேயே ஊழலுக்கு எதிரான சிறந்த சட்டம் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam