deepamnews
இலங்கை

 நீர் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம் – நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல்

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான், மின் கட்டணம் அதிகரித்துள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரித்து தான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் மக்கள் தற்போது இல்லை என குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், அவர்கள் அரசியல் ரீதியில் வளர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பது தனது அபிப்பிராயம் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

videodeepam

தமது கட்சியை பயன்படுத்தி வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபடுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

videodeepam

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின –  யாழ். மாவட்ட வெட்டுப்புள்ளி 143

videodeepam