deepamnews
இலங்கை

தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுமீதான  விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த எழுத்தாணை மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு உயர் நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான தினமாக எதிர்வரும் 23ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னர் தமது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் நகர்த்தல் பத்திரத்தினூடாக உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டிருந்தது.

Related posts

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்பு – இரண்டு மாதங்களுக்குள் ஒப்பந்தம்

videodeepam

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன விபத்தில் உயிரிழப்பு

videodeepam

தனித்து போட்டியிடும்  தமிழரசுக் கட்சி – பங்காளிகளும் வேறு கூட்டணியில்

videodeepam