deepamnews
இலங்கை

யாத்திரை சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் பலி – 28 பேர் காயம்

சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.

நோர்ட்ன் பிரிட்ஜ் பகுதியில் குறித்த பேரூந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை வட்டவலை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்தவர்கள் கொழும்பின் புறநகர் மஹரகமையில் இருந்து சிவினொலிபாத மலைக்கு சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

அமெரிக்க புறப்பட்டது அரசாங்க குழு- சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தும்

videodeepam

2023 ஆம் ஆண்டு புதிய வருட பிறப்பு இன்று – மக்கள் வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

videodeepam

வாகன விபத்துக்கள் மற்றும் நெருக்கடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம் –  பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

videodeepam