deepamnews
இலங்கை

வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையில் தீ விபத்து

பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று (21) மாலை 5.45 மணியளவில் மருந்துப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் புகை மூட்டத் தொடங்கியதையடுத்து, வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகச் செயற்பட்டு அம்பலாங்கொடை பொலிஸாருக்கு அறிவித்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

பின்னர் காலி தீயணைப்பு பிரிவினரை வரவழைத்து தீயை அணைத்து பல மருந்துகளை காப்பாற்றியதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் மருந்துகளுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை கணக்கிடப்படவில்லை.

அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மார்ச் மாதத்தில் கிடைக்குமென  ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

videodeepam

சிற்றுண்டிச்சாலைகளில் அரிசி மா உணவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்

videodeepam