deepamnews
இலங்கை

தேர்தல் தொடர்பில் மக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றம் பாதுகாக்கும் – லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கை

அரசியலமைப்பிற்கு அமையவே முத்துறைகளும் செயற்பட வேண்டும் எனவும்  திறைச்சேரியின் செயலாளர், அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோர் அரசியலமைப்பை புறக்கணித்து அமைச்சின் சுற்றறிக்கையை  பின்பற்றி தேர்தல் பணிகளுக்கு தடையேற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியலமைப்பிற்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும்,ஆனால் அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் மற்றும் திறைச்சேரியின் செயலாளர் அரசியலமைப்பை புறக்கணித்து சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுகிறார்கள்.கடனுக்கு வாக்குச்சீட்டுக்களை அச்சிட வேண்டாம் என சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சுற்றறிக்கையை கொண்டு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தடையேற்படுத்துவது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கருதப்படும்.நாட்டு மக்களின் அடிப்படை உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் மனித உரிமைகள் மீறப்படும் போது உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

உள்ளூரராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் உயர்நீதிமன்றம் அறிவிக்காது என்ற நம்பிக்கை உள்ளது.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் வாக்குரிமையில் தங்கியுள்ளது என்பதை நீதிம்ன்றம் நன்கு அறியும், ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை வழங்கும் இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் அரசாங்கம் தேர்தலை பிற்போடும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு காரணம் என்ன..?

videodeepam

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் – ஜனாதிபதி ரணில்

videodeepam

இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை

videodeepam