பாகிஸ்தானில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கு மாறாக 2 மாகாணங்களில் தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆரிஃப் அல்வி(Arif Alvi) தீர்மானித்துள்ளார்.
பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழு அந்நாட்டு தேர்தலை பிற்போடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அதனை கருத்திற்கொள்ளாமல் 2 மாகாணங்களில் தேர்தலை நடத்துவதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணையாளருக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாற்சென்று ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.