deepamnews
இலங்கை

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை –  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் தொ ன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம்.

இந்த நோக்கத்திற்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

எனவே, இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் கிவ் ஆர் ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ அல்லது வேறு எந்த எரிபொருள் உதவியையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கவோ முடியாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வாகனங்களுக்கான கிவ் ஆர் ஒதுக்கீட்டை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்க வேண்டுமானால், அத்தியாவசிய சேவைகள், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகையை குறைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீனவர் பிரச்சினை – கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா

videodeepam

காணிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

videodeepam

விசேட தேவையுடைய கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

videodeepam