deepamnews
இலங்கை

ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமா? – சாணக்கியன்

உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஜனாதிபதியிடமான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது என்று. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை IMF இனது உதவியுடன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக சாக்கு போக்கு சொல்லப்பட்டு பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமா? இதற்கான கால அவகாசம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

புகையிரத கழிவறையில் ஒரு குழந்தை கண்டெடுப்பு

videodeepam

ஒன்பது அமைச்சரவை அமைச்சர்கள் இந்த மாதத்திற்குள் நியமனம் – எஸ்.பி திஸாநாயக்க பகிரங்கம்

videodeepam

மார்ச்சில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்- தேர்தல் ஆணைக்குழு உறுதி

videodeepam